Tuesday, January 23, 2018

எழுதாவிட்டால் என்னதான் நடக்கும்                    எழுதாவிட்டால்  என்னதான்  நடக்கும் 
                  --------------------------------------------------------------

மூன்று நாட்கள் வலைப்  பக்கமே வர முடியவில்லை  உள்ளூரில் இருக்கும் உறவுகளுக்கு  நாங்கள் அவர்களை சந்திக்க செல்வதில்லை என்னும்  ஆதங்கம்  ஒரு முறை வெளியே போகும் போது கூடியவரை  பல செயல்களையும்  க்ளப் செய்வது  வழக்கம்  மனைவிக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வேண்டி டாக்டர் எழுதிக் கொடுத்திருந்தார் அதற்கு இரண்டு முறை செல்ல வேண்டும்  காலி வயிறுடனும்   உணவு உட்கொண்டபின்னும்  பரிசோதனைக் கூடம்  வீட்டிலிருந்து சுமார் 25 கி மீ தூரம்   அங்கு செய்தால் செலவை பிஎச் இ எல் ஏற்கும் மனைவியின்  அக்கா வீட்டுக்குச் சென்றோம்   மதிய உணவு அங்கே மாலை வேலை முடித்து வரும் மகன் பிக் அப் செய்வான் மனைவியின் அக்கா  வீட்டில் ஹோம்  தியேட்டர் இருக்கிறது எல்லாமே இன்றைய சூழலுக்கு ஏற்ப அப் டு டேட்  பாடல்கள் பல கேட்டோம்  கர்நாடக சங்கீதம்   மேற்கத்ட்க்ஹிய இசையுடன்   மனைவியின்  அக்கா பையனுக்குப் பிடித்தது ப்யூரிஸ்டுகள் விரும்பமாட்டார்கள் ஆனால் சங்கீத வாத்திய இசை துல்லியம்   இது குறித்து வலையில் கருத்துகள் இருந்தன எனக்கு திரையிசைப் பாடல்களில்  கர்நாடக இசையின்   சாயல் இருந்தால் ரசிப்பேன்  ஒரு மாற்றத்துக்கு நான்  ரசிக்கும் பாடல்
பாலமுரளி கிருஷ்ணா சுசீலா குரலில்  தங்கரதம் வந்தது

pஎன்ன எழுதுவது என்னும் சங்கட மிருந்தது எதை வேண்டுமானாலும் எழுதலாம்  என்றபடி பின்னூட்டங்கள் இருந்தன  ஒரு வேளை நான்  எழுதாவிட்டால் என்ன நடக்கும்   ஒரு சின்ன கற்பனை
 ஜீஎம்பி எழுதுவதில்லை  என்னும் செய்தி கேட்டவுடன்
செய்தி  வீட்டுப்பரண்மேல் ஏறியது  மனைவியும் குழந்தைகளும் வீட்டு முற்றத்தில் வீழ்ந்தனர் தொழுவத்தில் பசுவும் கன்றும்  கயிறு அறுத்து ஓடியது  காசியில் கங்கை  கலங்கி ஓடியது ஒரு காசின் பரப்பு வானம் ஓட்டையாகிற்று காரணம்  தெரியாமல் வலைஞர்கள் திடுக்கிடுகின்றனர் மெல்ல மெல்ல காரணம் புரியத்தொடங்க  ஜீஎம்பி வீட்டின் முன்   வலைப்[ பதிவர் கூட்டம்  தாள் வில்லை எழுதுங்கள் எழுதுங்கள் என்னும்  கோஷம் எங்கும் சட்டென்று ஒரு அடி விழ விழித்துப் பார்த்தால்  மனைவி என்னாச்சு என்னாச்சு என்று கேட்கிறாள்  கண்டது கனவில் வந்த நிமித்தங்கள் என்றதும்  சப்பென்று போயிற்று

எதை எழுதுவது என்று நினைத்தவன் இதையே எழுதத் துணிந்தேன்
என் மச்சினி வீட்டுக்குப் போனபோது அங்கு வைக்கப் பட்டு இருந்த விநாயகர் ஓவியம் என்னை ஈர்த்தது ஏன் என்றால் அது நான்  வரைந்து சகலைக்குக் கொடுத்தது இப்போது அவர் வீட்டில் அவர் இல்லை ஆனால் நான்  வரைந்த ஓவியம்  இருக்கிறது 
நான் வரைந்த ஓவியம் மேலே 

என் மனைவிக்கு இந்த ஆண்டு ஒரு காலண்டர் பரிசாக வந்தது  அதில் என்ன விசேஷம்  இது மத்ரையில் இருந்து கொண்டுவரப்பட்டு என் மனைவிக்கு  பரிசாகக் கொடுக்கப் பட்டது  அதைப் பார்த்ததும் என்கைகள் துறு துறுக்கத் தொடங்கியது அதில் இருந்த ஓவியங்களை தீட்ட வேண்டும் போல் இருந்தது ஒவ்வொரு பக்கமும்  மதுரைக் க்லோவில் மூர்த்திகள் அத்தனைஅழகு  அதில் ஏதாவது ஒன்றையாவது கண்ணாடி ஓவிய மாக்க வேண்டும் போல் ருக்கிறதுஆனால் இப்போதெல்லாம் ஓவியம்தீட்ட  கையும் கண்களும்  ஒத்த்ழைப்பதில்லைஇருந்தாலும்  முயற்சி செய்யலாம்  என்றிருக்கிறேன் 
எத்தனை காலண்டர்கள் வந்தாலும்   தேதி கிழிக்கும்படியான காலண்டர் வந்தால்தான் திருப்தி              

         

Friday, January 19, 2018

ஒரு சுய மதிப்பீடு


                                   ஒரு சுய மதிப்பீடு
                                   ---------------------------

 நான் எழுதியவற்றை பிறர் படித்து அவரவர் ஏதோ அபிப்பிராயம் கொண்டிருக்கலாம்  இருந்தாலும்  என் எழுத்துபற்றிய கணிப்பு இது
  
என் உறவினர் பலருக்குத் தமிழ் எழுதப் படிக்கத்தெரியாது என்ற நிலையில் நான் சென்ற வீட்டில் உறவினர் ஒருவருக்கு தமிழ் எழுதப் படிக்கத்தெரியும் என்று அறிந்தபோது  மகிழ்வுடன் நான் வலையில்தமிழில் பதிவிடுகிறேன் என்றும்  நான் சாதாரணன் ராமாயணம்  என்ற ஒரு பதிவு ஒரே வாக்கியத்தில் எழுதி இருக்கிறேன் என்றும் கூறி  படித்துப்பார்க்கச் சொன்னேன் ”ஒரே வாக்கியத்தில் ராமாயணமா எங்கே சொல்லு பார்க்கலாம்” என்றார் அப்போதுதான்  எனக்கு ஒரு உண்மை  உறைத்தது  நான்  எழுதியது  எனக்கு நினைவிருக்கவில்லை  வீட்டிற்கு வந்து படித்துப்பார்த்தேன்  அது எனக்கேஒரு பெருமித உணர்வைக் கொடுத்தது.ஆர்வத்தால் உந்தப்பட்டு சில நாட்கள்  அதற்காக மெனக்கெட்டு எழுதியதுஇப்போதும் அது மாதிரி எழுத முடியுமா  என்பது சந்தேகமே அப்போதுதான்விளங்கியது .என் நண்பன் ஒருவன்  என் பதிவுகள் சிலவற்றைப் படித்துவிட்டு இதை எல்லாம்  நீ எழுதினாயா இல்லை உன்னுள் இருந்து ஏதாவது குறளி  எழுத வைக்கிறதா  என்றுகேட்டது.   சில பதிவுகளைப் படிக்கும் போது எனக்கே அம்மாதிரி தோன்றுவது உண்டு
 
சாதாரணன் ராமாயணத்தைப் படித்துப் பார்த்த நண்பர் ஒருவர் பின்னூட்டத்தில் அதை நான்  எழுதியது  என்பதை நம்பவில்லை
தங்களால் எப்பொழுதும் இப்படி எழுதமுடியுமாவென்று எனக்கு ஐயம் இருக்கிறது. சில சமயங்களில் நம்மையறியாமல், நம்பமுடியாத காரியங்களை முடித்திருப்போம். செயல் முடிந்த பிறகே இதனை நாம்தான் முடித்தோமா என்று ஐயம் ஏற்படும். அத்தகைய தருணமொன்றில் எழுதப்பட்ட பாடல் என்று நினைக்கிறேன். அல்லது இயற்கையாக தங்களுக்கு மொழியில் நல்ல புலமை இருக்குமென்று நினைக்கிறேன். ஒரே வரியில் இராமாயணத்தைக் கவிதையாக கூறுவதென்பது சாமானியர்களால் சாத்தியான செயல் கிடையாது. ஏதோ ஒரு காலத்தில் நான் கல்வி மாவட்டம் அளவில் மூன்று முறை தமிழில் முதல் மதிப்பெண் எடுத்த ஞாபகம் இருக்கிறது. இப்பொழுது பெருங்காய டப்பா மட்டுமே உள்ளது. ஒரே ஒரு வார்த்தையில் சிறிது சந்தேகம் உள்ளது.
சுயம்வரப் பந்தலில் சனகனின் சிலையறுத்து” 
இதில்வில்லைமுறித்துஎன்று வரவேண்டுமென்று நினைக்கிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும். எனக்கு தவறு கண்டுபிடிக்கும் எண்ணம் இல்லை  சிலைஎன்றும்சொல்வது தவறில்லைஎன்று மறு மொழி கொடுத்தேன் 
 
.
இதெல்லாம் நான் எழுதியதா,இன்னொரு முறை இதைப் போல் எழுத முடியுமா என்றும்  தோன்றுகிறது
.
 இன்னொரு நண்பர் என் எழுத்துகளைப் படித்து விட்டு முன்பு இருந்த ஃப்லோ இப்போது இல்லை என்றார் அதுவும் சரிஎன்றேநினைக்கிறேன் 

எனக்குச் சில ஆதங்கங்கள் இளவயதிலிருந்தே உண்டு. எதுவும் செய்ய முடியாத கையாலாகாத்தனத்தால்  மனம் வருந்தியதும் உண்டு  அதற்கு சிலவடிகால்கள் வேண்டும்  எழுதுவதன் மூலம்   சிலவற்றை வெளிப்படுத்துகிறேன்  என் பலபதிவுகள் தலைப்புகளில் இருக்கும்  முக்கியமாக மக்களின்  ஏற்ற தாழ்வு பற்றிய சிந்தனைகள் அவற்றுக்கான  காரணங்களைக் காண முயல்வதுமாக இருக்கும்  இது சற்றுக் கூடுதலாக இருக்கும்போது  தேடுதலாக வெளிப்படும்    

என்னைப் போல் வயதானவர்களுக்கு அந்தக் காலத்தையும் இந்தக் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்  வாய்ப்பு இருக்கிறது  எதையும் எதிர் மறையாகச் சிந்திக்கும்  பலரைப்பார்க்கிறேன்  என்னைப் பொறுத்தவரை  நம்வளர்ச்சி நிச்சயமாக இருக்கிறது   ஆனால் எதிர்பார்ப்புகள்  அதிகமாக  இருக்கும் போது அளவீடு எதிர்மறையாக இருக்கிறது

நான் இதுவரை எழுதும்போது என் கருத்துக்களைக் கூறி, மற்றவர் அதிலிருந்து மாறுபட்டுஇருக்கலாம் என்று சொல்லி இருக்கிறேன்  எது எப்படி இருந்தாலும்  கருத்துகளும்   வேறுபாடுகளும் உணர்த்தப்பட்டால்தான்  தேரிய வருகிறது வலையில் அதற்கு நிறையவே  வாய்ப்பு இருக்கிறது நல்ல கலந்தெழுத்தாடல்கள்  வலையில் அருகியே இருக்கின்றன
  
கதை கவிதை கட்டுரை எதிலும் ஏதாவது கருத்திருக்க வேண்டும் என்று நம்புகிறவன் நான்  மேலும் நான் எழுதும்போது அந்தக் கருத்து என்  உள்ளத்தைப் பிரதி பலிப்பதாக இருப்பது  ஆச்சரியம் இல்லை  குறிப்பாக கதைகள் எழுதும்போது நிகழ்வுகளைச்சொல்லிப் போகையில் ஆங்காங்கே என் கருத்துகளும் ஊடுருவி நிற்கும் அதைத் தெரியப்படுத்தவே கதை கட்டுரை என்று நினைப்பவன் நான் ஏதாவது ஒரு கருத்துபற்றி  எழுத  வேண்டும்  என்ற உந்துதல் இருந்தால்தான் எழுதவே வருவேன் நான். பிறகு வந்து விழும்  எழுத்துகளும் கருத்துகளும்  உள்ளத்தில் இருந்து வருவதே  இப்போது நானெழுதுவதும்  ஒரு உந்துதலால்  நிகழ்வதே எல்லோருடைய உள்ளங்களிலும்  சிலகருத்துகள் இருக்கலாம் மற்றவருக்கு இது இப்படி இருந்திருக்கலாம்   இது இன்னும் நன்றாக இருக்கும் என்று எண்ணம்   வரலாம் ஆனால் என் எழுத்தில் வருவது என் எண்ணங்கள் தானே      

எனது வாழ்வின்விளிம்பில் என்னும்சிறு கதைத் தொகுப்பை மணிமேகலைப் பிரசுரம் மூலம் வெளியிட்டேன்  அதற்கு அணிந்துரை அளித்த தஞ்சை கவிராயர்  இவை எந்தப் பத்திரிக்கையிலும்  பிரசுரமானவை அல்ல  ஆகக் கூடியவையும் அல்ல என்று எழுதி இருந்தார் பத்திரிக்கை கதைக்கான  இலக்கணமோ உத்தியோ இன்றி எழுதப்பட்ட கதைகள் இவை தமிழ்ப்பத்திரிகைகளில் பிரசுரமாகும் தற்கால கதைகளைப் பற்றி சொல்வதற்கு வருத்தமாகத்தானிருக்கிறதுஒன்றும் பிரயோசனமில்லை அத்தி பூத்தாற்போல் அருமையான கதைகள் வரத்தான்  செய்கின்றன ஜீஎம்பி இந்த இரண்டுபிரிவிலும் அடங்காதவர் எழுத்தாளர் ஆக வேண்டும்  என்ற உத்தேசமோ அல்லது அவ்வாறு ஆகி இருப்பதை அடையாளப் படுத்தும் நோக்கமோ சிறிது மின்றி தன்  எண்ணங்களைப் பதிவு செய்திருக்கிறார் வாசகர்களின்  சுவாரசியத்துக்காக இக்கதைகள் எழுதப் படவில்லை

இதை உயர்வு நவிற்சியாக  எடுத்துக் கொள்ளவா கூடாதா என்பது இன்னும் எனக்கு விளங்க வில்லை   

இதுவும் நான் எழுதுவதா இல்லை என்னுள் இருந்து ஏதாவதுகுறளி  எழுத வைக்கிறதா   தெரியவில்லை  ஆனால் ஒன்று எனக்கு எழுதுவதற்கு  நிறையவே இருக்கிறது  அதைப் புரிந்து படிப்பதற்கு  வாசகர்களும்  இருப்பார்கள்  என்ற நம்பிக்கையுமிருக்கிறது  பதிவுநீளமானால்  படிக்காமலேயே போவோரும் இருக்கிறார்கள் என்றும்தெரிகிறது  

.


.
  
   
    

Tuesday, January 16, 2018

(புன்) நகைத்துச் செல்ல


                              (புன்)    நகைத்துச் செல்ல
                               -------------------------------

இவற்றைப்படித்து காதில் ரத்தம்வந்தால் நான்பொறுப்பல்ல
கேள்வி –எந்தப்போரில் நெப்போலியன்  இறந்தான்
பதில் – அவனது கடைசிப் போரில்
கேள்வி –சுதந்திரப் பிரகடனம்  எங்கு கயெழுத்திடப்பட்டது?
பதில் –பிரகடனப்பத்திரத்தின் கடைசியில்
கெள்வி –தோல்விகளின் காரணமென்ன ?
பதில் –பரீட்சைகள்
கேள்வி _கலைச் சிற்றுண்டியில் எதை சாப்பிட முடியாது?
பதில் –மதிய இரவு உணவுகளை
கேள்வி –அரை ஆப்பிள் மாதிரி தோன்றுவது எது?
பதில்- அதன்மற்ற பாதி
கேள்வி-சிவப்புக் கல்லை நீலக்கடலில் எறிந்தால் என்னாகும்  ?
பதில் –ஈரமாகும்
கேள்வி-ஒருவர் எட்டு தினங்கள் தூங்காமல் இருந்தால் என்னாகும் ?
பதில் –ஒன்றுமாகாது.அவர் இரவில் உறங்கலாம்
கேள்வி-உன் ஒரு கையில் நான்கு ஆப்பிள்கள் மூன்று ஆரஞ்சுகள்
மறுகையில் நான்கு ஆரஞ்சுகள் மூன்று ஆப்பிள்கள் இருந்தால் உன்னிடம் இருப்பது என்ன?
பதில் –இரண்டு பெரிய கைகள்
கேள்வி –ஒரு யானையை ஒரு கையால் தூக்குவது எப்படி?
பதில்  -- ஒருகையுள்ள யானையே கிடையாது
கேள்வி –எட்டுபேர் ஒரு சுவற்றை நான்கு மணி நேரத்தில் கட்டினால் நான்கு பேர் அச்சுவற்றைக் கட்ட எவ்வளவு நேரமாகும் ?
பதில்  நேரமே வேண்டாம் .. சுவர் ஏற்கனவே கட்டியாயிற்றே
கேள்வி-ஒரு முட்டையை காங்கிரீட்  தளத்தில் விரிசலாகாமல் போடுவது எப்படி ?
பதில் –சாதாரணமாக காங்கிரீட் தளங்கள் விசிசலாவதில்லை
கேள்வி – River Raavi  flows in which state
பதில் In fluid state

 இனி கொஞ்சம் ஆங்கில அறுவை

1)   At a movie theatre  which arm rest is yours
2)   In the word scent  is S silent or C silent
3)   If people are evolved from monkeys  why are monkeys still around
4)   Why is there a D in fridge but not in refrigerator
5)   Who knew what time it was when the first clock was made
6)   If pros and cons are opposite won”t the the opposite of progress be congress
7)   Wonder why the word funeral starts  with FUN

டிஸ்கி … இங்கு எழுதப்பட்டவற்றுக்கு நான்பொறுப்பல்ல கேட்டதும் படித்ததும்பகிரப்படுகிறது
  
   
 
  

Sunday, January 14, 2018

பொங்கல் கதையுடன் வாழ்த்து


                         பொங்கல்  கதையுடன் வாழ்த்து
                        -------------------------------------------------
 ஒவ்வொரு விழாவுக்கும் ஒரு கதை உண்டு ஜனவரி 14ம் நாள் பொங்கல்  அதே பொங்கல் நாளன்று சபரிமலையில் மகர சங்கராந்தி அன்று மாலை பொன்னம்பல மேட்டில்  அய்யப்பனே ஜோதி வடிவில் காட்சி தருகிறான் என்னும் எண்ணத்தில் சபரி மலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்  அது அய்யப்பனின் ஜோதிஅல்லச் மனிதர் ஏற்றும் தீப்பந்தமே என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டும் ஜோதி தரிசனம்காண வரும் மக்கள் கூட்டம்  குறைய வில்லைபழையன கழித்து புதியன புகுத்தும்விதமாக பொங்கலுக்கு முதல் நாளா போகி கொண்டாடப்படுகிறது இதற்கு இன்னொரு கதையும்  உண்டு அந்தக்காலத்தில் ஆயர் பண்டிகை இந்திரனுக்கே உரித்தாயிற்று  அதுவே அந்த நாள் இந்திர விழாவாயிற்று
இந்திரனுக்கு விழாகூடாது மரம்நிறைந்த மலைக்கன்றோ விழாவேண்டும்  என்று கூறிய கோபாலன் பால் கோபம் கொண்டு இடியுடன் பெரு மழையும் தோற்றுவித்தான்  இந்திரன் மலைத்தூக்கி கொடையாய் எடுத்து  ஆயர் துயர் துடைத்தான்கண்ணன்
செறுக்கொழிந்த இந்திரனுக்கு தொடரும்விழா போகி அவனிடம் இருந்து ஆயர்களையும் ஆநிரைகளயும்  காத்த நாள் சூரிய நாராயண வழிபாடாயிற்று பரிதிக்கு நன்றி நவில அதுவே பொங்கலுக்கு வித்தாயிற்று  அறுவடை செய்த புது அரிசி கொண்டு  பொங்கல்  படைத்து மக்கள் மகிழும்திருநாளே பொங்கல் உழவருக்கு உதவும்  ஆநிரைக்கு நன்றி சொல்லும்  நாளே மாட்டுப் பொங்கல்

மகரம் என்றால் சூரியன்  அவன் தனுர் ராசி விட்டு
மகர ராசிக்குள் நுழையும் காலம் உத்தராயணம் எனப்படும்        
பகலவனும் பாதை மாறிப்
பயணம் செய்யத் துவங்கும்
இந்நாளே மகர சங்கராந்தி
இது ஒரு உழவன்  திருநாள் 
தமிழர்களுக்கே உரித்தானது போன்ற
மயக்கம் ஏனோ உழைக்கும்  மக்கள்
மனம் மகிழும் நந்நாள் 

ஆண்டின்  துவக்கமே இந்நாள் என்று
அரசாணை இட்டு மாற்றவும் அந்தோ முயன்றனர்
நாளெல்லாம் ஒன்றுபோல் இருக்க
நன்றி நவிலக் கொண்டாடும் திருநாளில்
தைபிறந்தால் வழி பிறக்கும்என்னும் நம்பிக்கையே ஆதாரம்
முற்றிய கன்னலுடன் சூல் முற்றிக்
கதிர் சாய்ந்த செந்நெல் குத்திய
புத்தரிசி கொண்டு புதுப் பானையதனில் பொங்கலாக்கி
படைத்திடும்  இந்த நாளில்  அனைவருக்கும்  வாழ்த்து கூறு கிறேன் 
பொங்கும் மங்களமெங்கும்  தங்குக 

(இதில் ஒரு பாதி மீள்பதிவு )
 


Thursday, January 11, 2018

நினைவுகளுக்கு பஞ்சமில்லை


                                     நினைவுகளுக்கு பஞ்சமில்லை
                                   --------------------------------------------------

நினைவுகளுக்குப் பஞ்சமில்லை
இம்மாதம் ஐந்தாம்  தேதியே மனைவி  நினைவு படுத்தி விட்டாள் சனிக்கிழமை ஆறாம்  தேதி பஹுள பஞ்சமி திருவையாறு  ஆராதனைகள் நேரலையில் ஒளிபரப்பாகும்   கேட்கவேண்டும் என்றாள் எனக்கு திருச்சியில் இருந்தபோது 1980 களின்  துவக்கத்தில் திருவையாறு பஞ்சமி கீர்த்தனைகளைக் கேட்கச் சென்றது நினைவிலாடியது இன்னும் ஒருமுறை பெங்களூரில் இருக்கும் பொது ஆஸ்திரேலியா இந்தியாவுக்கிடையே நடந்தடெஸ்ட் மாட்சை யும்   ஆராதனையையும்  விட்டு விட்டுக் கேட்டதும் நினைவுக்கு வந்தது அன்று போல் இன்றும் டெஸ்ட் மாட்ச்தான்   ஆஃப்ரிகா இந்தியா இடையே ஆனால் பஞ்சமி    கீர்த்தனைகள்முடிந்த பின்  ஆட்டம் தியாகராஜர் எத்தனையோ கீர்த்தனைகள்பாடியிருந்தும்  ஐந்து கீர்த்தனைகள் கொண்டு மட்டுமே ஆராதனை நடத்தப்படுகிறது  மேலும்  நான்காவது கீர்த்தனையான கனகன ருசி என்னும்  கீர்த்தனை வராளி ராகமாம் ( இதெல்லாம்  ஸ்ரீராமுக்கு அத்துபடியாயிருக்கும்  ) அந்த ராகத்தை யாரும்  சொல்லிக் கொடுக்க மாட்டார்களாம்   சொல்லிக் கொடுக்காமலா இத்தனை பேரும் ஆராதனையில், பாடுகிறார்கள்
நாங்கள் திருவையாறுக்கு ஆராதனைக்குச் சென்றுவந்ததெல்லாம்  நினைவில்  வருகிறது  காலையில் உணவு எடுத்துக் கொண்டு போய் ஆற்றின் கரையில் உண்டதும்  பாடல் வரிகளைப் பார்க்க கொடுக்கப்பட்டிருந்தசின்ன ஏட்டுடன்  கூடவே  பாடமுயற்சி செய்ததும் இப்போது நினைத்தால் தமாஷாக இருக்கிறது  இந்தமுறை ஆராதனை ஒளிபரப்பாகும்போது காமிராவில் சில பகுதிகளைப் பதிவாக்கினேன்  ஆனால் பகிர முடியவில்லை நீளம்  அதிகமானபடியால்பகிர முடியவில்லை

பழைய நினைவுகளை புரட்டிப் பார்க்க வைத்த விஷயம்  இன்னொன்றுண்டு இந்தவிலை வாசிகள். அன்றும் இன்றும்   எண்ணி பார்க்கவும் முடியவில்லை என்மகன்  எனக்கு அனுப்பி இருந்த சில படங்கள் அந்தக் காலநினைவுக்கு இழுத்துச் சென்றது அதற்குமுன் 

  ஒரு பாட்டின்  வரி

அஞ்சு ரூபா நோட்டு  கொஞ்ச முன்ன மாத்தி மிச்சமில்லை  காசு மிச்சமில்லை 
கத்திரிக்காய்  வெல கூட கட்டவில்ல ஆச்சு காலங் கெட்டு போச்சு 

  என் மனைவி அந்தக் கால செலவுகளை அங்கும் இங்கும்  குறித்து       வைத்திருக்கிறாள்  எரிவாயு சிலிண்டரின் விலை ரூ 26 /- என்றுஎழுதப்பட்டு இருக்கிறது இன்னும்  சில விலைகளுமிருக்கின்றன ஆனால் குவாண்டிடி குறிப்பிடப்படாததால் இங்கு சொல்ல முடியவில்லை நாங்கள் விஜய வாடாவில் இருந்தபோது (1976-1980) தங்கம் ஒரு சவரன்  ரூ 200. என்னும் அளவில் இருந்தது நாங்கள்பெங்களூர் வந்தபோது நாங்கள் தங்கியிருக்கும்   இடத்துக்கும்   சிவாஜி நகருக்கு ம்பேரூந்து கட்டணம் ரூ. ஒன்று அதுவே இப்போது ரூ25 /- சிலபடங்களை இடுகிறேன்   எழுத  இருப்பதை விட அவை நன்குவிளக்கும்

பெட்ரோல் விலை ஒரு பில் 
சினிமா டிக்கெட் 

 சில அரிய புகைப்படங்கள் 

      
  
இப்போது எப்படி இருக்கிறது 

.
மாற்றமொன்றுதான் மாறாததுநான் பிறக்கும் முன் 


அரசியல் தலைகள் 

அந்த நதி எங்கே 

விலையை பாருங்கள் 
பதிவில் நான் எழுதி இருந்த விலையைப் பாருங்கள்

சங்கீத வித்தகிகள்

.

Monday, January 8, 2018

தர்க்கமா குதர்க்கமா                                                     தர்க்கமா குதர்க்கமா
                                                     --------------------------------

கேள்வி:- இரண்டுபேர் சிம்னியில் இருந்து இறங்கி வருகிறார்கள். ஒருவரது முகம் சுத்தமாக இருக்கிறதுமற்றவருடைய முகம் அழுக்காக இருக்கிறது. இருவரில் யார் முகத்தை கழுவுவார்கள். ?

பதில்:- அழுக்கான முகத்தோடு இருப்பவரே கழுவுவார்,

தவறு,! தூய்மையான முகத்தை உடையவரே கழுவுவார். யோசித்துப்பார். அழுக்கான முகத்துடன் இருப்பவர் சுத்தமான முகத்துடன் இருப்பவரைப்பார்த்து தன் முகமும் அதேபோல் இருப்பதாக நினைத்துக் கொள்வார். சுத்தமாக இருப்பவரோ அழுக்கானவரின் முகத்தைப் பார்த்து தன் முகமும் அழுக்காக இருப்பதாக  நினைத்துக் கொள்வார்.எனவே சுத்தமான முகம் உடையவரே முகத்தைக் கழுவுவார்...!

மிகவும் சாமர்த்தியமான பதில்தான் இன்னொரு கேள்வி கேளுங்கள்...

கேள்வி:- இரண்டுபேர் சிம்னியிலிருந்து இறங்கி வருகிறார்கள். ஒருவரது முகம் சுத்தமாக இருக்கிறதுமற்றவரது முகம் அழுக்காக இருக்கிறது யார் முகத்தைக் கழுவுவார்.?

பதில்:- மீண்டும் அதே கேள்வியா?இதற்கான பதில் தெரிந்ததுதானே. தூய்மையான முகத்துடன் இருப்பவர்தான் கழுவுவார்.

தவறு, .! இருவருமே தங்கள் முகத்தைக் கழுவுவார்கள். ஒரு சின்ன லாஜிக்கை நினைத்துப் பார். அழுக்கு முகத்துடன் இருப்பவர் சுத்தமான முகத்துடன் இருப்பவரைப் பார்ப்பார். எனவே தனது முகமும் சுத்தமாக இருப்பதாக நினைப்பார். சுத்தமான முகத்தை உடையவர் ச்ழுக்கான முகமுடையவரைப் பார்த்து தன் முகமும் அழுக்காக இருப்பதாக நினைத்துக்
    
    தன் முகத்தை கழுவுவார். அதைப் பார்த்து அழுக்கான முகமுடையவரும் தன் முகத்தைக் கழுவுவார்.எனவே இருவருமே தங்கள் முகத்தைக் கழுவுவார்கள்.

நான் இதை யோசித்துப்பார்க்கவில்லை. எனது தர்க்கத்தில் இப்படிஒரு தவறா.?
மீண்டும் கேள்வி கேளுங்கள்

கேள்வி:- இரண்டு பேர் சிம்னியில் இருந்து இறங்கி வருகிறார்கள்.ஒருவர்
முகம் சுத்தமாக இருக்கிறது. மற்றவருடையது அழுக்காக இருக்கிறது. யார் முகத்தை கழுவுவார்.?

பதில்:- மீண்டும் அதே கேள்வி....! இருவருமே முகத்தைக் கழுவுவார்கள்.

தவறு. இருவருமே கழுவ மாட்டார்கள். அழுக்கான முகமுடையவர் சுத்தமான முகம் இருப்பவரைப்பார்த்துத் தன் முகமும் சுத்தமாக இருப்பதாகநினைத்துக் கொள்வார். சுத்தமான முகமுடையவர் மற்றவரைப் பார்த்துத் தன் முகமும் அழுக்காக இருப்பதாக நினைத்துக் கொள்வார். ஆனால் அழுக்கான முகமுடையவர் தன் முகத்தைக் கழுவாதது பார்த்துத் தானும் கழுவமாட்டார். எனவே இருவருமே கழுவ மாட்டார்கள்.

தயவு செய்து இன்னொரு முறை தேர்வு வையுங்கள்
கேள்வி:- இரண்டுபேர் சிம்னியிலிருந்து இறங்கி வருகிறார்கள். ஒருவர் முகம் சுத்தமாக இருக்கிறது. மற்றவர் முகம் அழுக்காக இருக்கிறதுயார் முகத்தைக் கழுவுவார்கள்.?

பதில்:- இருவருமே கழுவ மாட்டார்கள்....!

தவறு.இரண்டுபேர் சிம்னியிலிருந்து கீழே வரும்போது ஒருவர் மட்டும் தூய்மையான முகத்துடனும் மற்றவர் அழுக்கான முகத்துடனும் எப்படி இருக்க முடியும் .எனவே கேள்வியே முட்டாள்தனமானது. முட்டாள்தனமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முயன்றால் விடைகளும் முட்டாள்தனமாகத்தான் இருக்கும்.

யூத மதத்தைச் சார்ந்த  ராபி ஷ்வார்ட்ஸிடம் ஸீன் கோல்ட்ஸ்டீன் என்ற 20 வயது இளைஞன்  தான் தத்துவத்தில் பட்டம் பெற்றிருப்பதாகவும் சாக்ரடீஸின் தர்க்கத்திலும் டாக்டர் பட்டம் பெற்றிருப்பதாகவும் கூறி தால்மத் பற்றிப் படிக்கக் கருதுவதாகவும் தெரிவித்தான்
அதற்கு ராபி வைக்கும் பரிசோதனையில் வெற்றி பெற்றால் அதைச் சொல்லித் தருவதாகக் கூறி வைத்த பரீட்சையே மேலே படித்தது.
உண்மையைத் தேடுவதுதான் முக்கியமே தவிர  விடையைக்கண்டுபிடிப்பது முக்கியமல்ல. அண்மையில் இறையன்பு அவர்கள் எழுதி இருந்ததைப் படித்ததில் இருந்து

இன்னொரு பகுதி

காலை நேரத்தில் ஒருவர் புத்தரிடம் வந்து கடவுள் இருக்கிறார் அல்லவா “ என்று கேட்டார்.
புத்தர் இல்லைஎன்றார்
மதியம் ஒருவர் வந்து கேட்டார்கடவுள் இல்லைதானே
புத்தர் “ இருக்கிறார் “ என்று கூறினார்.
மாலையில் ஒருவர் வந்து “ கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை “ என்றார்.
உடனே புத்தர் “ நீ சரியான கேள்வியைக் கேட்கிறாய்என்றார்.
புத்தருக்கு அருகில் இருந்தவருக்கு குழப்பமாகி விட்டது. “ நீங்கள் ஒரே கேள்விக்கு மூன்று விதமான பதில்களைச்சொல்கிறீர்களே ஏன் “ என்று கேட்டார்.
கேள்வி கேட்டவர்களுக்கு ஏற்ற மாதிரி பதில் இருந்தது “என்றார் புத்தர்.
“காலையில் வந்தவர் கடவுள் இருக்கிறார் என்று ஏற்கனவே முடிவு செய்து கொண்டு வந்து என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்டார். நான்இல்லைஎன்று சொன்னேன். அதனால் அவர் சுயமாகத் தேடத் துவங்குவார். மதியம் வந்தவர் ‘கடவுளில்லைஎன்று முடிவு செய்துவிட்டு என்னிடம்வந்து கேட்டார்..அவரிடம் இருக்கிறார் என்று சொன்னால்தான் தானாகத் தேடலைத் தொடங்குவார். மூன்றாம் நபரோ ஏற்கனவே தேடிக்கொண்டிருக்கிறாரெனவே அவர் பார்வை சரியானது என்று விளக்கினேன். கேள்விகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை.கேள்வி கேட்பவரைப் பொறுத்தே பதில் அளிக்கிறேன் “ என்றார்.

.

.